சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் 58 வயதான கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















