டித்வா பேரிடரினால் நாட்டில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1.7 மில்லியன் மக்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.
நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் காணாமல்போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.
பாதிக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேற சில குடியிருப்பாளர்கள் மறுத்துவிட்டாலும், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
















