‘மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்’ என வர்ணித்து, 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடன் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று புதன்கிழமை வரவேற்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்பான கதவுகளை திறந்துள்ளது மற்றும் மீண்டும் பார்வையாளர்களை வரவேற்கத் தயாராக உள்ளது என்ற ஒரு தெளிவான செய்தியை உலகிற்கு தெரிவிக்கிறது.
இந்த சொகுசு கப்பலில் இருந்த 2,300 பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்ட ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் மற்றும் அரை நாள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.















