-9 சிறுவர் திருணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு-
2025ம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரசபை தகவல் மேலும் தகவல் தெரிவிக்கையில்,
10,455 முறைப்பாடுகளில் 545 முறைப்பாடுகள் பாலியல் துன்புறத்தல்கள் தொடர்பானவை, 231 முறைப்பாடுகள் பாலியல் துஷ;பிரயோகங்கள் தொடர்பானவையாகும்.
இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகார சபை பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ;பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிபரங்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.
இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.


















