2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் இலக்கு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பஸ் நிலைய புதுப்பித்தல் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் இதுபோன்ற 15 பஸ் நிலையங்கள் அமைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளுக்கு எளிதாக பஸ், ரயில் மற்றும் முச்சக்கரவண்டி சேவைகளை ஒரே இடத்திலிருந்து வழங்கும் வகையில் புதிய நிலையங்கள் வடிவமைக்கப்படும் எனவும், கொழும்பு உள்ளிட்ட பல முக்கிய பஸ் நிலையங்களை மேம்படுத்த அமைச்சு செயல்பட்டு வருவதாகவும், போக்குவரத்துத் துறையை மேம்படுத்தாவிட்டால் நாம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.


















