புனித நோன்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குவைத் அரசாங்கம் இம்முறை 25 தொன் ஈச்சம் பழங்கள் குவைத்தி பதிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் நேற்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பு 7 ல் உள்ள குவைத் தூதரகத்தில் வைத்து ஈச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் குவைத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள அஷ்ஷேக் மன்சூர் ஜப்பார், குவைத்தின் இலங்கைக்கான தூதுவர் ஆலயத்தின் சார்ஜ் டி அபயாரும் பதில் தூதுவர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ் ஆகியோர்கள் இணைந்து 16 நிறுவனங்களின் தலைவர்களுடன் கையளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய குவைத் பதில் தூதுவர் மேன்மை தாங்கிய அப்துல்லாஹ் அல் முஹ்ன்னாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:-
இலங்கை – குவைத் நட்புறவின் திட்டத்தின் கீழ் குவைத் அரசாங்கம் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி, வீடமைப்பு மற்றும் பாதை அபிவிருத்தி என பல்வேறு திட்டங்களுக்கு உதவி வருகின்றது.
அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த 4 தசாப்த காலங்கள் குவைத் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர். இலங்கை -குவைத் நட்புறவு கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நிலவி வருகிறது என்றார்.


















