சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தசேவை தற்போது 11 மாவட்டங்களில் நிகழ்நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
அனைத்து மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் அவற்றை பெற முடியும் என்றும் அமரசிங்க குறிப்பிட்டார்.


















