சட்டவிரோதமாக 30 மதுபான போத்தல்களைக் கொண்டு சென்ற ஒருவரை தொடுவாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் வாடகைக்கு எடுத்த சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும், இதில் தனது குடும்ப உறுப்பினர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர் மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, தனது மகளின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேடுவதற்காக இந்த சட்டவிரோத மதுபானத்தை கொண்டு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















