கல்விச் சீர்திருத்தங்கள் தாமதமடைந்ததால் பாதிக்கப்பட்ட தரம் 6 மாணவர்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார்.
மாதம்பையில் அமைந்துள்ள SEDEC கேட்போர் கூடத்தில், சிலாபம் கல்வி வலய அதிகாரிகள் மற்றும் அதிபர்களைச் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் பதவியேற்ற போது, பாரிய மாற்றங்கள் தேவைப்படும் முக்கிய துறையாகக் கல்வித்துறையே அடையாளம் காணப்பட்டது. இவ்வாறான புதிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் போது ஒரு சிறு சிறுபான்மையினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பலாம், ஆனால் அவை முறியடிக்கப்படும்.
அனைத்து புதிய கல்விச் சீர்திருத்தங்களும் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொழிற்கல்விக்காக (Vocational Education) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான அதிகூடிய நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஏற்கனவே பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















