இலங்கையின் கனிம வளங்கள் ஆய்வு மற்றும் அது சார்ந்த தொழில்களில் முதலிட 14 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட முதலீடுகளின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை கனிம மணல் ஆய்வு மற்றும் பதப்படுத்துதலில் கவனம் செலுத்துகின்றன.
இந்த முதலீடுகளை எளிதாக்குவதற்காக, கைத்தொழில் அமைச்சு தற்போது கனிம வளங்களை நிர்வகிக்கும் ஒரு புதிய கொள்கை கட்டமைப்பை தயாரித்து வருவதுடன், ஒரு வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையையும் உருவாக்கி வருகிறது.
இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது கனிமத் துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நூற்றுக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இலங்கையின் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.















