-ஞானத்தமிழ்-
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு மின்னினைப்பாளர், அலுமினியம் பொருத்துனர் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கான ஆடைவடிவமைப்பாளர் ஆகிய 6 மாதங்களைக் கொண்ட கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேரடியாக வல்வெட்டித்துறைத் தொழிற்பயிற்சி நிலைத்திற்கு வருகை தந்து விண்ணப்பங்களை பெறமுடியும்.


















