அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் ‘பாட்டுப் பாடவா’ என்ற பக்திப் பாடல் போட்டியொன்றை நடத்தவுள்ளது.
இப்போட்டியில், இலங்கையின் எப்பகுதியிலும் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்ற முடியும்.
போட்டியில் பங்குபற்றுபவர்கள் முதலில் கெரோக்கியில் ஓரிரு பக்திப் பாடல்களைப் பாட வேண்டும். பின் வருட இறுதியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வாத்திய இசையுடன் பாட வேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெறுபவருக்கு 30 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு 25 ஆயிரம் ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களை தலைவர் எஸ்.வி.ஜே – 0775933919 மற்றும் செயலாளர் கே.ஈஸ்வரலிங்கம் 0773124543 ஆகியோரது கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெறமுடியுமென அறிவிக்கப்படுகின்றது.


















