எதிர்பாராத வகையில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கேகாலை துல்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

துல்ஹிரிய ஸ்ரீ சித்தார்த்த பௌத்த மத்திய நிலையத்தில் வளர்ந்து வந்த நாய்க்கே இவ்வாறு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நாயின் பெயர் பிங்கி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்பாராமல் உயிரிழந்த அந்த நாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் நாய்க்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


















