-7 கடைகள் உடைக்கப்பட்டன-
-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை மேற்படி வர்த்தக நிலையங்கள் வழக்கம்போல் பூட்டப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்காகாக, உரிமையாளர்கள் சென்றபோது அவை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி நகரின் மத்தியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.















