நான்காவது ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்று புதன்கிழமை பெல்ஜியம் நோக்கிப் புறப்பட்டார்.
பிரதி அமைச்சர் பிரஸ்ஸல்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்துகொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஐரோப்பிய ஒன்றிய – இந்தோ பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் உயர்மட்ட அமர்வுகளில் பிரதி அமைச்சர் பங்கேற்பார். பரஸ்பர ஒத்துழைப்புள்ள முக்கிய துறைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















