ஜீவனின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகள் ரா.சீதைஸ்ரீ நாச்சியாரின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் சிறப்பாக இடம்பெற்றது.
திருமண நிகழ்வில் தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளுமுகமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்லவுள்ளதாக ஐ.தே.க.வின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையிலுள்ள மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இதேவேளை திருமண நிகழ்வையடுத்து இலங்கையிலும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிதிகளுக்கு விசேட விருந்துபசாரமொன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.


















