எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை ரூபாய் 50 முதல் 60 ரூபாய் வரை உயரலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் காலத்தில் முட்டையின் விலை உயரும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.


















