நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி டிசம்பர் 16 என்றும், அந்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
















