-10ம் திகதி 98 வீதமான வீதிகள் திறக்கப்படும்-
டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 246 வீதிகள் நேற்று பிற்பகல் முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, டிசம்பர் 10ம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட வீதிகளில் சுமார் 98 வீதமான வீதிகள் மீளவும் திறக்கப்படும்.
அதே நேரத்தில் 150 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து வசதிகளை மீட்டெடுப்பது குறித்து சிறப்பு விவாதங்கள் நடத்தப்பட்டவேண்டும்.
இந்தக் காலகட்டத்தில், பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
















