-ஆடிப்பாடிய மக்கள்-
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டித்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மக்களின் மனங்களை வாட்டியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி, தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின் நாலாபக்கங்களிலும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உணவுகள், சிறு தேவைகள் எனப் பல பக்கங்களிலிருந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறு எதையும் எடுக்காமல் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவ்வாறு பல நாட்களாக சிக்கித் தவித்த குடும்பங்கள் தங்கவைக்கப்பட்ட முகாமொன்றில் ஒரு எளிய இசை மாலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இசை நிகழ்ச்சியில் தம்மை மறந்து தமக்கு நேர்ந்த துயரத்தை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடினர்.
சில மணிநேரங்களுக்கு வெள்ள நீர், காணாமல் போன ஆவணங்கள் அல்லது மீண்டும் கட்டமைக்கக் காத்திருக்கும் உடைந்த சுவர்கள் பற்றிய கவலையை மறந்தனர்.
















