மாரவில – மாரவில, மாரண்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம், உயிரிழந்த பெண் தனது வீட்டின் முன் இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன்போது அருகில் இருந்த 10 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















