பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் வைத்தியர் ராமதாஸ், தனது 88-ஆவது பிறந்தநாளான இன்று (25) அரசியல் ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்ற தனது 88-ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய வைத்தியர் ராமதாஸ், “இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க மற்றும் அதன் அரசியல் செயல்பாடுகளை இனி அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் பார்த்துக்கொள்வார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 20 நாட்களாக தலைசுற்றல் காரணமாகத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தன்னைக் காண வருபவர்கள் நலம் விசாரிக்கலாமே தவிர, அரசியல் குறித்துப் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதுடன், உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்றும் மாறாது” என்றும் தொண்டர்களிடம் உருக்கமாகப் பேசியுள்ளார்.

















