தீவக கிரிக்கெட்டை வளர்ச்சிக்காக அர்பணிப்போடு செயற்பட்டுவரும் கிரிக்கெட் ஆர்வலர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தால் “கிரிக்கெட் பற்றாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகத்தின் தீவக கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இருதினங்கள் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.
இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

இப் போட்டி நிகழ்வின் போது சிறப்பம்சமாக தீவக கிரிக்கெட் வளர்ச்சியில் நீண்டகாலம் அர்ப்பணிப்போடு செயலாற்றி வரும் கிரிக்கெட் ஆர்வலர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களின் சேவையினை பாராட்டி காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தால் “கிரிக்கெட் பற்றாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கிரிக்கெட் ஆர்வலர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்திரு அன்ரன் அமலாதாஸ் அடிகளாரால் பொன்னாடை போர்த்தி “கிரிக்கெட் பற்றாளர்” விருதை வழங்கி கௌரவித்தார்.
தீவகத்திற்குள் மட்டுபடுத்தப்பட்ட கிரிக்கெட்டை யாழ். மாவட்ட ரீதியில் தீவக வீரர்கள் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தீவகத்தில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட அணியினை உருவாக்கி களமமைத்துக் கொடுத்த பெருமை கிரிக்கெட் ஆர்வலர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரனை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது


















