புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை மற்றும் நாத்தாண்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மார்க்கத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அப்பாதையிலான ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டையிலிருந்து கொச்சிக்கடை ரயில் நிலையம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அனர்த்த நிலைமை காரணமாக பல ரயில் பாதைகளுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டதுடன், மலையக ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த பல இடங்களில் மீண்டும் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
















