-சு.பாஸ்கரன்-
மன்னார் – வெள்ளாங்குளம், 3ம் பிட்டி, தேவன்பிட்டி பகுதிகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பாடசா லை, தேவன் பிட்டி பாடசாலை, மூன்றாம் பிட்டி பாடசாலை மூன்றாம் பிட்டி முன்பள்ளி ஆகியவற்றுள் வெள்ள நீர் புகுந்து பெருமளவான மரங்களும் முறிந்து விழுந்து காணப்பட் டன. இந்நிலையில் இப்பாடசாலைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கடற்படையினர், இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து துப்புரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
நாச்சிகுடா பகுதியில் அமைந்துள்ள கடற்படையினர் வெள்ளாங்குளம் பகுதி இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த துப்புரவுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதில் நாச்சிகுடா கடற்படை அதிகாரி மற்றும் கடற்படையினர்,
இராணுவத்தினர் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.


















