சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, சோஷலிச இளைஞர் சங்கத்தினர் 23ஆம் திகதி புதன்கிழமை யாழ் தேவி புகையிரதத்தின் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை பயணத்தை தொடங்கிய இக்குழுவினர், மதியம் யாழ் புகையிரத நிலையம் வந்திறங்கினர். குருநாகல் மற்றும் அநுராதபுர புகையிரத நிலையங்களில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழில், இளைஞர்கள் யாழ் புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் ஒன்றைப் அன்பளிப்புச் செய்ததுடன், சுற்றுச்சூழல் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
இக்குழுவுடன், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், இளைஞர் விவகார அமைச்சர் ஏரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், யாழ் புகையிரத நிலையத்திலிருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. அங்கு கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
24 ஆம் திகதி வியாழக்கிழமை இக்குழுவினர் எழுவைதீவுக்கு பயணிக்க உள்ளனர். அங்கு 200 பனங்கன்றுகள் நடப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


















