சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுடன் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கு மருத்துவப் பராமரிப்பு வழங்குவதற்கு விலங்கு நலக் குழு ஏழு நாள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சினால், விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து இத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் தற்காலிக தங்குமிடங்களுக்கும் சென்று உதவி தேவைப்படும் விலங்குகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு Vets for future. Baw Baw Animal Welfare மற்றும் Help a Dog ஆகிய அமைப்புகள் நிதியுதவி வழங்குகின்றன.
இதுவரையில் சுமார் 30% நாய்கள், பூனைகள் சிகிச்சை பெற்றதாகவும், இவற்றை அவற்றின் உரிமையாளர்களே பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வந்துள்ளனர் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெறிநாய் தடுப்பூசிகள் போடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















