டித்வா பேரிடரினால் கண்டி மாவட்டத்தில் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 75 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்ட பிரதி அத்தியட்சகர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் நேற்றுவரையான காலப்பகுதியில் 54,988 குடும்பங்களைச் சேர்ந்த 1,89,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திக ரணவீர மேலும் தெரிவித்தார். மேலும் 20,155 குடும்பங்களைச் சேர்ந்த 70,282 பேர் இடம்பெயர்ந்தனர்.
6,097 குடும்பங்களைச் சேர்ந்த 21,456 பேர் 261 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், 2,974 குடும்பங்களைச் சேர்ந்த 45,732 பேர் உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். 2263 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன, மேலும் 14,735 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.
















