அனர்த்தத்தால் சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் நோயல் பிரியந்த, தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தின் விளைவாக, பல மின்சார நுகர்வோர் தங்கள் வீடுகளை இழந்து நிலைமையில், சேதமடைந்த அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் தற்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் பதிவான மொத்த மின் தடைகளின் எண்ணிக்கை சுமார் 4.1 மில்லியனாக பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்தது.
















