-போதைப்பொருட்கள்,சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு-
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களில் 22 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாகவும், சந்தேக நபர்கள் 18 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 4,134 மில்லிகிராம் ஐஸ், 1,875 மில்லிகிராம் ஹேஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
















