வவுனியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அனைத்து குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும், 124 குளங்கள் உடைப்பெடுத்திருந்தமையாலும், வயல் நிலங்கள் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















