நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதன்படி, ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (24) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















