டித்வா புயலுக்கு பின்னர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை உலக வங்கிக் குழுமம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கிக் குழுமம், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதியை மாற்றி ஒதுக்குவதன் மூலம் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
டித்வா புயலினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், நீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பை மீட்டெடுக்கவும் சீரமைக்கவும் இது உதவும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்கும், விவசாயம், உற்பத்தி மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் ஆலோசனை மற்றும் மூலோபாய முதலீடுகளை வழங்குவதன் மூலம், உலக வங்கிக் குழுமத்தின் தனியார் துறைப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், தனியார் துறையைத் தொடர்ந்தும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான ஆதரவும் உள்ளடங்கும்.
மீட்பு முயற்சிகளுக்கு வழிகாட்ட, அனர்த்த அபாயக் குறைப்புக்கான உலகளாவிய வசதியுடன் இணைந்து, அனர்த்தத்திற்குப் பின்னரான உலகளாவிய விரைவான சேத மதிப்பீடு ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பக்கட்ட முடிவுகளை எடுப்பதற்கும், பதிலளிப்பு மற்றும் மீட்பு முயற்சிகளைச் சரியான முறையில் இலக்கு வைப்பதற்கும், இந்த விரைவான மதிப்பீடு அனர்த்தத் தாக்கங்கள் குறித்த நம்பகமான மதிப்பீடுகளை வழங்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
சுநடிரடைனiபெ ளுசi டுயமெய நிதியத்தை உருவாக்கி அனர்த்தத்திற்குப் பின்னரான தேவை மதிப்பீடுகளின் அடுத்த கட்டம் உள்ளிட்ட பரந்த அளவிலான மீட்புத் திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
















