கிராமசேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டிய தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் 1905 அல்லது ஜனாதிபதி செயலகம் : 0112354354, 0112354655, 0112484500, 0112484600,0112484700.
முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்.
கிராம சேவகரின் பெயர் ,அவர் பணியாற்றும் பிரிவு, பிரதேச செயலர் பிரிவு, மாவட்டம், நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடிக் கொடுப்பனவுகள், முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்.
மேலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.
உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராமசேவகரிடம் கேளுங்கள், தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள், நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.
















