இலங்கையின் கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய மறுசீரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இரு நிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டமை மூலம், ஷின்ஷோன்ஜி தன்னார்வ சங்கம் (SVA) மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) கடந்த வியாழக்கிழமை முக்கிய மைல்கல்லை அடைந்தன.
வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், MEPA, வெள்ளவத்தை காவல்துறை, நவோதயா சிறப்புத் தேவைகள் பள்ளி, SVA தலைவர் மற்றும் 140 க்கும் மேற்பட்ட ஷின்ஷோன்ஜி தன்னார்வலர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தினை உணர்த்தும் விதமாக, அண்மையில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
நவோதயா சிறப்புத் தேவைகள் பாடசாலையின் அதிபர் லட்சுமி கருணாஜீவ, தனது உற்சாகமாளிக்கும் சிறப்புரையில், இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதற்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் பிரகாசமான, மற்றும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதான திட்டங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை தெரிவித்திருந்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய MEPA தலைவர் சமந்த குணசேகரவும் இதே உணர்வை எதிரொலித்தார்.
ஷின்ஷோன்ஜி தன்னார்வ சங்கத்தின் முயற்சிகளுக்கு அவர் மனதார பாராட்டுகளைத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிலையில், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அதன் இயற்கை சூழலை மறுசீரமைப்பதற்கும் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார். வெள்ளவத்தை காவல்துறையின் சுற்றுச்சூழல் பிரிவின் உதவி ஆய்வாளர் பத்திரண அவர்கள், தனது பிரிவில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்துவது மிகவும் மதிப்பளிக்கத்தக்கது என உரையில் வலியுறுத்தியதன் மூலம், நிறுவனங்களின் இந்த முயற்சிக்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தார்.

அவர் சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், மேலும் MEPA மற்றும் SVA ஆகிய இரண்டினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். இலங்கை ஷின்ஷோன்ஜி தன்னார்வ சங்கத்தின் தலைவர் அவர்கள், கடல் பாதுகாப்பு குறித்தான விரிவடைந்து வரும் தேவையை குறித்து பகிர்ந்து கொண்டதுடன், தேசிய அபிவிருத்தியை ஆதரிக்கும் மற்றும் சமூகங்கள் மத்தியிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் முகமாக, தொடர்ச்சியான தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படும் பங்களிப்புகளுக்கு SVA இன் உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்தினார்.
கடல்சார் பாதுகாப்பு, சமூகக் கல்வி மற்றும் நிலைபேண்தகு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்புள்ள நீண்டகால பங்குடமையை குறிப்பதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்திருந்ததுடன், இரு அமைப்புகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட நோக்கம் மற்றும் ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
MOU கையொப்பமிடலை தொடர்ந்து, ஒருங்கிணைந்த கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு ஆரம்பமானது. கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை, மட்டக்களப்பு கல்லடி கடற்கரை மற்றும் யாழ்ப்பாணம் கிழக்கு அரியாலைக் கடற்கரை போன்ற மூன்று பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஒன்றுபட்டு செயற்படுவதன் பலத்தினை உணர்த்திய இந்த நிகழ்வில் மொத்தமாக 210 ஷின்ஷோன்ஜி தன்னார்வலர்கள் பங்கேற்றதுடன், ஒரே நேரத்தில் நாடளாவிய ரீதியில் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருந்தனர்.
பிராந்தியம் முழுவதும் சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், SVA மற்றும் MEPA இடையேயான பரஸ்பர புரிந்துணர்வு, அரசு நிறுவனங்கள் மற்றும் சமூக தன்னார்வலர்களை ஒரு பொதுவான நோக்கத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள அடித்தளமாக அமைகிறது.
இலங்கையின் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் ஆர்வத்துடன் பங்களிக்கும் எதிர்கால திட்டங்களைத் தொடர்ந்து உருவாக்குவாதற்காக இரு அமைப்புகளும் தங்கள் ஒன்றிணைந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தன.


















