நாம் உட்கொள்ளும் உணவுகளில் மாற்றங்கள் செய்தாலே நம் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்றவை அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமன்றி மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊதா நிற உணவுகள் சிறந்தது.
ஆந்தோசயனின்கள் எனும் இயற்கையான தாவர நிறமிகள், சில காய்கள் மற்றும் பழங்களுக்கு ஊதா நிறத்தை வழங்குகின்றன.
இந்த தாவர நிறமியானது, நோய் எதிர்ப்பு செல்களை பாதுகாக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என கூறப்படுகிறது.
நாவல்ப் பழம்

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் பண்பு இதில் உண்டு.
புளூபெர்ரிஸ்

ஒட்சிசனேற்றம் அதிகம் உண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் சோர்வைக் குறைக்கிறது.
பீட்ரூட்

இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
கருப்பு திராட்சை

இதில் ரெஸ்வெராட்ரோல் எனும் வேதிப்பொருள் உள்ளடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள விட்டமின் – சி சருமத்துக்கு நன்மை செய்கிறது.
ஊதா சர்க்கரைவள்ளிக்கிழங்கு

இதில் நார்ச்சத்து மற்றும் ஒட்சிசனேற்றிகள் அதிகம் உண்டு. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
ஊதாநிற கோவா

இதில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் – சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


















