இந்திய உள்ளுர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிண்ணத்தில் டெல்லி அணிக்காக வீரர் விராட் கோலி டெல்லி – ஆந்திரா அணிகள் மோதிய போட்டியில் பல சாதனைகளை படைத்தார்.
அதன்படி, முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ஓட்டங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.


















