தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து அத்தியட்சகர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என தற்போதைய அத்தியட்சகர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருகிறது. இது வைத்திய சேவைகளை முறையாக நடத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனது வைத்தியசாலையில் இரண்டு மருத்துவர்கள் சமீபத்தில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இடமாற்றம் செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


















