பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளான எட்டுப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளவித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 6 மாணவர்களும், இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


















