இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் டீலுனு நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள், BYD நிறுவனம் விரைவான வளர்ச்சியுடன் சந்தையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, புதிய வாகன மற்றும் மின்சார வாகன (EV) சந்தைகளில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது.
இவற்றில் SEALION 6 மாதிரி, SUV ரக வாகனப் பிரிவில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கைச் சந்தையில் BYD அறிமுகப்படுத்தும் நவீன ரக வாகனங்கள் மற்றும் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டு வரும் அதன் விற்பனை வலையமைப்பு ஆகியவையே இந்த அபார வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இதுதொடர்பாகJohn Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் BYD வாகனங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
புதிய வாகன சந்தையில் BYD முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் சிறப்பான சேவை அனுபவத்தை வழங்குவதற்காக விற்பனைக்குப் பின்னரான சேவை வசதிகளையும் விரைவாக மேம்படுத்தி வருகிறோம்.
இந்த முதலீடுகள் மூலம் சேவை வசதிகளை கணிசமாக விரிவுபடுத்தவும், சேவையின் தரத்தை நிலையானதாக பேணவும், வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தடையற்ற உதவியை வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.


















