இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இவ்வாறு ஒன்றிணையவுள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலங்கம – அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.


















