-நிசாம் காரியப்பர் எம்.பி-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் நேற்று நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
திஸ்ஸ விதாரணவின் மரணச் சடங்குக்கு சென்றிருந்த ரவூப் ஹக்கீடம் அங்கு வந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தனக்கு கிடைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திலேயே தான் வாழ்வதாக தெரிவித்துள்ளார். ஆனந்த சங்கரியின் மகன் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் ஆனந்தசங்கரி தனது சுய உழைப்பில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என நினைக்கிறார்.
அவரது முழுநேர நாடாளுமன்ற வாழ்க்கையின் பின்னர் கிடைத்த ஓய்வூதியம் அவருக்கு யாரின் உதவியும் இல்லாமல் வாழ வைத்தது. அதுதான் ஒரு மனிதனுக்கு முக்கியமானது. ஓய்வூதியம் நீக்கம் அசாதாரணமானது. சிறு தொகையினர் தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஓய்வூதியம் நீக்கம் செய்வதற்கான முறைமை பிழையானது. கண்மூடித்தனமாக நீக்க எடுத்த தீர்மானம் தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.


















