வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 17 மற்றும் 18ம் திகதிகளில் ஏற்கனவே 2,84,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளதாகவும் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 351000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


















