-இலங்கை மத்திய வங்கி-
இலங்கையில் தங்கக் கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் இல்லையென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில், உலக சந்தையில் தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. உலக சந்தையில் 2000 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 284 டொலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 5000 டொலர் வரை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் இந்தப் பெறுமதி 5500 டொலர் வரை உயர்ந்து, பின் 5,000 டொலருக்கு வீழ்ச்சியடைந்து அந்த மட்டத்திலே காணப்படுகிறது.
இவ்வாறான சூழலில் ஏற்கனவே தங்கக் கடன்களுக்கு மூலதனக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நிதி நிறுவனங்கள் தமக்கான பாதுகாப்பு வரம்புகளை சுயமாகவே பின்பற்றி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
















