-ஆணைக்குழுவின் தலைவர் தகவல்-
நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் புதிதாக ஐந்து அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டிற்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி முதலாம் ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவே மாகாண தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.
தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக உள்ள காரணிகள் மற்றும் தாமதங்கள் குறித்து உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.


















