-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு-
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லையென அரசாங்கம் அப்பட்டமாகப் பொய் கூறி வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது அரசின் அகம்பாவத்தையும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத இயலாமையையுமே காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குப்பியாவத்தையில் நேற்று முன்தினம் 700 மாணவர்களுக்குப் பாடசாலைப் பைகள் வழங்;கும் நிகழ்வில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைத் திட்டங்கள் இன்று மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பாரிய ஆடை உற்பத்தி நிறுவனமான ஆயுளு ர்ழடனiபெ இல் 96 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.இந் நிலையில்,அதனை 70 ஆயிரமாகக் குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதனால் சுமார் 26 ஆயிரம் பேருக்கு வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க வரிக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளைச் சரியாக முன்னெடுக்க அரசினால் முடியாமல் போனமையேயாகும்.
தொழிற்சாலைகளைத் திறக்கும் அனுபவம் இல்லாதவர்கள், இன்று அவற்றை மூடிவிட்டுத் தொழிலாளர்களை வீதிக்கு இறக்கப்போகின்றனர்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால், நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசினால், தட்டுப்பாடு இல்லையென அரசு அப்பட்டமாகப் பொய் கூறி வருகின்றது. இது அரசின் அகம்பாவத்தையும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத இயலாமையையுமே காட்டுகின்றது என்றார்.


















