வைத்தியர்கள் பற்றாக்குறையினால் கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறினார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மகாநாயக்கத்தேரரை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
இன்று நாட்டின் எல்லாத்துறைகளிலும் பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. நோயாளர்கள் வைத்தியர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முன் வரவேண்டும்.
தற்போது அரசுக்கு போதியளவு நிதி உள்ளது. அவற்றை திறைசேரியில் முடக்கி வைத்திருப்பதில் பயன் இல்லை. தேவையான விடயங்களுக்கு செலவிட வேண்டும்.
இன்று வைத்தியர்களுக்கும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் பாரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறைந்த பட்சம் நாட்டில் உள்ளவர்களையாவது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்,
இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேலைத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்க வேண்டும் என்றார். இச்சந்திப்பில் அரச வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச உட்பட பலர் கலந்துகொண்டனர்.


















