எவன்கார்ட் நிறுவனம் நடத்திய மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, விசாரணைக்கு எடுக்காமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் ஆரம்பகட்ட பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவன்கார்ட் நிறுவனம் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த கடல்சார் பாதுகாப்பு சேவைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்தச் செயற்பாடுகளினால் நாட்டிற்குப் பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்ததையடுத்து ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு அந்தப் பொறுப்பை கடற்படையிரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.


















