தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 5,00,000 ரூபா பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. பரீட்சைக்குத் தோற்றும் களனியைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த மாணவன் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவியுடன் காதல் உறவைத் ஏற்படுத்தியிருந்தார்.
களனி பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என்பதால் உறவை முறித்துக் கொள்ளுமாறு மாணவியின் தந்தை மாணவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து மாணவன், மாணவியின் தந்தையை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.















