-ஒழுங்கமைப்புகள் பூர்த்தி-
கச்சதீவு புனித அந்தோனியார் அலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை காலை திருநாள் திருப்பலியும், திருச்சொரூப பவனியும் இடம்பெற்று நிறைவுபெறும்.
திருவிழா திருப்பலியை யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இலங்கை மற்றும் இந்திய பங்குத் தந்தைகள் இணைந்து ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
இம்முறை கச்சதீவு திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து சுமார் நான்காயிரம் பேரும், இலங்கையில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் பங்குபற்றவுள்ள நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் யாழ்.மாவட்டச் செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு பிரதேசசபை, ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், செஞ்சிலுவை சங்கம், நெடுந்தீவு ப.நோ.கூ.சங்கம் ஆகியவற்றுடன் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
திருநாள் திருப்பலியில் பங்குபற்றும் அடியவர்கள் மாவட்டச் செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதுகாப்புடன் கலந்துகொள்ள முடியும்.


















